/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குண்டு மிளகாய் வத்தல் ரூ.6000 விலை வீழ்ச்சிகுண்டு மிளகாய் வத்தல் ரூ.6000 விலை வீழ்ச்சி
குண்டு மிளகாய் வத்தல் ரூ.6000 விலை வீழ்ச்சி
குண்டு மிளகாய் வத்தல் ரூ.6000 விலை வீழ்ச்சி
குண்டு மிளகாய் வத்தல் ரூ.6000 விலை வீழ்ச்சி
ADDED : பிப் 25, 2024 02:44 AM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் குண்டு மிளகாய் வத்தல் கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ.6000 விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
ஆர்.எஸ். மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மிளகாய் சந்தை நடக்கிறது. நேற்று சந்தைக்கு 130 குவிண்டால் குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரத்தில் முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.4000 விலை வீழ்ச்சி ஏற்பட்டு 21,000 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.23 ஆயிரத்திற்கு விற்பனையான இரண்டாம் தர சிறிய குண்டு வத்தல் நேற்று குவிண்டாலுக்கு ரூ.6000 விலை வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.6000 வரை விலை வீழ்சியடைந்ததால் வேதனை அடைந்த சில விவசாயிகள் மூடைகளை திருப்பி கொண்டு சென்றனர்.