/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஆயத்தப் பணிகள் மும்முரம்உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஆயத்தப் பணிகள் மும்முரம்
உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஆயத்தப் பணிகள் மும்முரம்
உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஆயத்தப் பணிகள் மும்முரம்
உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஆயத்தப் பணிகள் மும்முரம்
ADDED : ஜன 25, 2024 04:55 AM

ஆர்.எஸ்.மங்கலம்: மழைக்காலம் முடிந்ததால் உப்பளத்தில் மீண்டும் உப்பு உற்பத்தியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் துாத்துக்குடி, வேதாரணியத்திற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கிழக்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம் கோப்பேரிமடம், சம்பை, திருப்பாலைக்குடி, நதிப்பாலம், வாலிநோக்கம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் உப்பள பாத்திகள் அமைத்து அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் பயன்பாட்டிற்கும் வெளி மாவட்டங்களுக்கு செல்கிறது. அக்., முதல் ஜன., வரை நான்கு மாதங்களாக பருவ மழையால் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது மழை முடிந்த நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தியை துவங்கும் வகையில் மாவட்டத்தில் உப்பள பாத்திகளில் படிந்துள்ள ஜிப்சம், கழிவுகளை வெட்டி அப்புறப்படுத்துவதுடன், உப்பள பாத்திகளின் வாய்க்கால் சீரமைப்பு மற்றும் பாத்திகள் சீரமைப்பதில் தொழிலாளர்கள் மும்முரமாக உள்ளனர்.
இதனால் இன்னும் சில வாரங்களில் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி துவங்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.