/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல் கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல்
கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல்
கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல்
கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல்
ADDED : மே 22, 2025 11:49 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெல் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன நீரை பயன்படுத்தி, பாசன பகுதிகளான இருதயபுரம், பொன்னாலகோட்டை, பெத்தார் தேவன் கோட்டை, நோக்கன்கோட்டை, பிச்சைனார் கோட்டை, அழகர் தேவன் கோட்டை, பொட்டக்கோட்டை உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான நெல் வயல்களில் வளர்ச்சி நிலையில் உள்ள நெற்பயிர்களை புகையான் நோய் தாக்குவதால் பயிர்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து கோடை நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் சீதோஷ்ண நிலை காரணமாக நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் கோடை சாகுபடி செய்துள்ள நெல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.