ADDED : செப் 18, 2025 10:46 PM
கீழக்கரை; கீழக்கரை அருகே பழஞ்சிறை கிராமம் முத்தர சம்மன் கோயில் பொங்கல் உற்ஸவத்தை முன்னிட்டு மூலவர் முத்தரசம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள்அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பூஜைகள் செய்தனர். பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற் பாடுகளை பழஞ்சிறை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.