ADDED : மார் 18, 2025 10:41 PM
கமுதி : கமுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக லெட்சுமி பணிபுரிகிறார். இவரது கணவர் மாரிமுத்து 43, கமுதி போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மாரிமுத்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
நேற்று முன்தினம் குடித்து விட்டு வந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாரிமுத்து மின்விசிறியில் போர்வையால் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரை கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.