Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/திருவாடானை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை: விசாரணையில் தொய்வு 

திருவாடானை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை: விசாரணையில் தொய்வு 

திருவாடானை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை: விசாரணையில் தொய்வு 

திருவாடானை சப்-டிவிஷனில் போலீஸ் பற்றாக்குறை: விசாரணையில் தொய்வு 

ADDED : ஜன 29, 2024 05:25 AM


Google News
திருவாடானை: திருவாடானை சப்-டிவிஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால், பணிச்சுமை அதிகரித்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, எஸ்.பி.பட்டினம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் 20 முதல் 26 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

இவற்றில் தனிப்பிரிவு, ரைட்டர், கோர்ட், பாரா, ஜீப் டிரைவர், கம்யூட்டர் பிரிவு, கைதி பாதுகாப்பு, எஸ்.பி. அலுவலக டூட்டி, ரோந்து பணி மற்றும் விடுப்பில் சென்றவர்கள் போக 7 முதல் 10 பேர் வரை மட்டுமே பணியில் உள்ளனர்.

இதனால் வழக்கமான குற்றங்கள், மோதல்கள், விபத்துகள், எதிர்பாராத அசம்பாவிதங்கள், போன்ற பணிகளுக்கு, இருக்கும் குறைவான போலீசாரை கொண்டு செயல்பட வேண்டிய நிலையில் போலீஸ் துறை உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகள், விதவிதமான திருட்டுக்கள் என நாளுக்கு நாள் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வழக்குகளை முதல் நாள் விசாரிக்கும் போலீசார் மறுநாள் வேறு வழக்குகள் சம்பந்தமாக விசாரிக்க சென்று விடுவதால் பழைய புகார்களுக்கு தீர்வு வேண்டி பாதிக்கபட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதுள்ளது.

குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது சம்பவங்களில் பங்கேற்க முடியாத மன அழுத்ததிற்கும் ஆளாகின்றனர். போலீசார் 24 மணி நேரமும் தொடர் அலுவலில் இருக்க வேண்டியதுள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு டேஷன்களிலும் கூடுதல் போலீசாரை நியமிக்க உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us