/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு போலீசார் அறிவுரை நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு போலீசார் அறிவுரை
நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு போலீசார் அறிவுரை
நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு போலீசார் அறிவுரை
நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு போலீசார் அறிவுரை
ADDED : ஜூன் 02, 2025 10:26 PM
திருவாடானை: திருவிழாவிற்கு செல்லும் பெண்களே நகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என போலீசார் அறிவுரை கூறினர். திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது.
கோயில் முன்புள்ள கலையரங்கத்தில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக பெண்கள் செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சியை துவக்கி வைத்து திருவாடானை இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் பேசியதாவது:
கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஏராளமான பெண்கள் வருகிறார்கள். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதும் நகைகளை அணிந்து செல்லும் பெண்கள் நகை மீது கவனமாக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் கலைநிகழ்ச்சியில் இருந்து விடக் கூடாது.
கூட்டத்தில் சந்தேகப்படும் படியாக யாராவது இருந்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் கூறுங்கள். குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.