/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குப்பை கிடங்கு அருகே ரோட்டில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் நோய் தொற்று அபாயம் மறுசுழற்சி செய்ய வலியுறுத்தல் குப்பை கிடங்கு அருகே ரோட்டில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் நோய் தொற்று அபாயம் மறுசுழற்சி செய்ய வலியுறுத்தல்
குப்பை கிடங்கு அருகே ரோட்டில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் நோய் தொற்று அபாயம் மறுசுழற்சி செய்ய வலியுறுத்தல்
குப்பை கிடங்கு அருகே ரோட்டில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் நோய் தொற்று அபாயம் மறுசுழற்சி செய்ய வலியுறுத்தல்
குப்பை கிடங்கு அருகே ரோட்டில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் நோய் தொற்று அபாயம் மறுசுழற்சி செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2025 03:23 AM

ராமநாதபுரம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்கு பரவுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.இவற்றை சுத்தமாக அள்ளி மறுசுழற்சி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சக்கரகோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 25 ஏக்கரில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பை மற்ற பகுதிகளுக்கு பரவாத வகையில் சுற்றிலும் தடுப்பு சுவர்கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது.
சில தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களிடம் உள்ள குப்பை, கட்டடக் கழிவுகள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் குப்பை கிடங்கின் அருகே கொட்டி செல்கின்றனர்.
அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து கிழக்கு கடற்கரை சாலை வரை பரவி காணப்படுகிறது.
இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் குப்பை பறந்து செல்வதால் அப்பகுதியில் வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து சக்கரக்கோட்டை குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் நகராட்சி குப்பை கிடங்கை காட்டிலும், வெளியில் தான் அதிக குப்பை காணப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பையை கிடங்கில் கொட்டாமல் சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால் அந்த குப்பை காற்று பலமாக வீசும் போது 1 கி.மீ., தள்ளி உள்ள குடியிருப்பு பகுதி வரை பரவுகிறது.
அதுமட்டுமின்றி அருகில் உள்ளநீர்நிலைகலும் குப்பை பரவுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.குப்பை கிடங்கு அருகே தீ வைப்பதால் அதில் வரும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் குப்பை கிடங்கில் மலை போல் குப்பை வந்து குவிகிறது. இதனை மறுசுழற்சி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.