ADDED : ஜூன் 05, 2025 11:39 PM
ராமநாதபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் 2025ல் 1.20 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் அருகே இரட்டையூருணி கிராமத்தில் தென்னை விவசாயி முத்துவேணி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
துணை தோட்டக்கலை அலுவலர் தங்கவேலு, உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப் பங்கேற்றனர்.மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் 400 கிராமங்களில் தலா 5 என 2000 அரச மர கன்றுகள் இந்த ஆண்டிற்குள் நட உள்ளனர்.