/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி நெடுஞ்சாலையில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்பரமக்குடி நெடுஞ்சாலையில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
பரமக்குடி நெடுஞ்சாலையில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
பரமக்குடி நெடுஞ்சாலையில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
பரமக்குடி நெடுஞ்சாலையில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
ADDED : ஜன 08, 2024 05:30 AM

பரமக்குடி, : பரமக்குடியில் ராமநாதபுரம் நெடுஞ்சாலையோரம் பொதுப்பணி துறை அலுவலகம் அருகில் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிவருகிறது.
பரமக்குடி நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் நெடுஞ்சாலை ஓரம் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் உள்ள வலது பிரதான கால்வாயை கடந்து செல்கிறது.
மேலும் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாயும் உள்ளது. கால்வாய் மேல் பகுதிகளில் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளது. இதனால் பல நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து குடிநீர் வெளியேறுவதால் சேறும், சகதியுமாகி ரோட்டோரம் நடக்க முடியாமல் விபத்து அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.