/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரை நகருக்கு வருவோருக்கு பொதுக்கழிப்பறை வசதி தேவை சிரமப்படும் மக்கள்கீழக்கரை நகருக்கு வருவோருக்கு பொதுக்கழிப்பறை வசதி தேவை சிரமப்படும் மக்கள்
கீழக்கரை நகருக்கு வருவோருக்கு பொதுக்கழிப்பறை வசதி தேவை சிரமப்படும் மக்கள்
கீழக்கரை நகருக்கு வருவோருக்கு பொதுக்கழிப்பறை வசதி தேவை சிரமப்படும் மக்கள்
கீழக்கரை நகருக்கு வருவோருக்கு பொதுக்கழிப்பறை வசதி தேவை சிரமப்படும் மக்கள்
ADDED : ஜன 06, 2024 05:34 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் மக்கள் தினமும் கீழக்கரை நகருக்கு பொருட்கள் வாங்கவும், விற்பனை செய்யவும் வருகின்றனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து கட்டட கூலி தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் வணிகத்திற்காகவும், துறை சார்ந்த அலுவல்களுக்காகவும் பல்வேறு பணி நிமித்தமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறை வசதி இல்லாததால் மன்னார் வளைகுடா கடற்கரை ஓரங்களிலும், சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ள காட்டுப் பகுதிகளுக்கும் செல்கின்றனர். இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் கீழக்கரை நகர் முன்னாள் தலைவர் ஹமீது பைசல் கூறுகையில், கீழக்கரை நகருக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்டண கழிப்பறை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாலும் முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுகளுடன் உள்ளது.
பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்ப ஆண், பெண்களுக்கு தனித்தனியாக 20 சமுதாய கழிப்பறை வளாகம் அமைக்க வேண்டும்.
பராமரிப்பு செலவுக்காக நகராட்சி சார்பில் குறைந்த கட்டணத்தை வசூல் செய்யலாம். மக்கள் சிரமத்தை தீர்க்க கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.