/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதிஇ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
இ-சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
ADDED : பிப் 12, 2024 04:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு, புகைப்படம் எடுக்க நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் தாலுகா வளாகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம் மூலம் நிரந்தர ஆதார் சேர்க்கை இ-சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் தினமும் வந்துசெல்கின்றனர் கைரேகை, புகைப்படம் எடுக்க முதலில் வரும் நபர்களுக்கு டோக்கன் வழங்கி புகைப்படம் எடுக்கின்றனர்.
அதன்பின் வரும்நபர்கள் நீண்ட காத்திருந்து சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் ஆதார்பதிவு மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து, விரைவாக கைரேகைபதிவு, புகைப்படம் எடுக்க வேண்டும்.--------