/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின்கம்பம், மின்கம்பியை மாற்ற மக்கள் கோரிக்கை மின்கம்பம், மின்கம்பியை மாற்ற மக்கள் கோரிக்கை
மின்கம்பம், மின்கம்பியை மாற்ற மக்கள் கோரிக்கை
மின்கம்பம், மின்கம்பியை மாற்ற மக்கள் கோரிக்கை
மின்கம்பம், மின்கம்பியை மாற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 11:31 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம், மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மட்டியரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு உத்தரகோசமங்கை துணை மின்நிலையத்தில் இருந்து விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின் கம்பம், மின்கம்பி வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் லுார்து மனுவேல் கூறியதாவது:
மட்டியரேந்தல் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் சாய்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதிதாக மின்கம்பம்,மின்கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.