/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர் வரல டி.எஸ்.பி.யிடம் முறையிட்ட மக்கள் கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர் வரல டி.எஸ்.பி.யிடம் முறையிட்ட மக்கள்
கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர் வரல டி.எஸ்.பி.யிடம் முறையிட்ட மக்கள்
கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர் வரல டி.எஸ்.பி.யிடம் முறையிட்ட மக்கள்
கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர் வரல டி.எஸ்.பி.யிடம் முறையிட்ட மக்கள்
ADDED : ஜூன் 01, 2025 11:05 PM
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழாவுக்கு வந்த டி.எஸ்.பி., சண்முகத்திடம் கிராமமக்கள் குடிநீர் வசதி வேண்டி முறையிட்டனர்.
கூவர்கூட்டம் கிராமத்தில் ஏ.எம்.டி., அறக்கட்டளை சார்பில் நடிகர் அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா முதுகுளத்துார் டி.எஸ்.பி.,சண்முகம் தலைமையில் நடந்தது.
அப்போது அறையை திறந்து வைத்து சி.சி.டி.வி., கேமரா செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த கூவர்கூட்டம் கிராமமக்கள் கிராமத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம்.
இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் பயனில்லை. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் முறையிட்டனர். சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதாக டி.எஸ்.பி., கூறினார்.
இதுபோன்று முதுகுளத்துாரில் நகர் தேவர் உறவின்முறை சார்பில் முளைக்கொட்டு திண்ணையில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டது.
கேமரா கண்காணிப்பு அறையை டி.எஸ்.பி., சண்முகம் திறந்து வைத்தார். உடன் உறவின்முறை தலைவர் சேர்வாரன், செயலாளர் நாகலிங்கம் பொருளாளர் ராமர் உட்பட நிர்வாகிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.