/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜமாபந்தியில் மனு அளித்து மக்கள் பயன்பெறலாம்: தாசில்தார் தகவல் ஜமாபந்தியில் மனு அளித்து மக்கள் பயன்பெறலாம்: தாசில்தார் தகவல்
ஜமாபந்தியில் மனு அளித்து மக்கள் பயன்பெறலாம்: தாசில்தார் தகவல்
ஜமாபந்தியில் மனு அளித்து மக்கள் பயன்பெறலாம்: தாசில்தார் தகவல்
ஜமாபந்தியில் மனு அளித்து மக்கள் பயன்பெறலாம்: தாசில்தார் தகவல்
ADDED : மே 18, 2025 12:17 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனுக்கள் அளித்து மக்கள் பயன்பெறலாம் என்று தாசில்தார் கோகுல்நாத் கூறினார். அவர் கூறியதாவது:
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு 1434ம் ஆண்டு பசலி ஆண்டுகளுக்கான ஜமாபந்தி முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மே 20ல் முதுகுளத்துார் வடக்கு, மே 21ல் முதுகுளத்துார் தெற்கு, மே 23ல் கீழத்துாவல் உள்வட்டம், மே 27ல் மேலகொடுமலுார் உள்வட்டம், மே 28ல் தேரிருவேலி உள்வட்டம், மே 29ல் காக்கூர் உள்வட்டம் கிராமங்களுக்கு நடக்கிறது.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மேலும் நேரில் வந்து தகவல் தெரிந்து கொள்ளலாம் என்றார்.


