/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உச்சிநத்தத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் மக்கள் அவதி உச்சிநத்தத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் மக்கள் அவதி
உச்சிநத்தத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் மக்கள் அவதி
உச்சிநத்தத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் மக்கள் அவதி
உச்சிநத்தத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் மக்கள் அவதி
ADDED : மே 31, 2025 11:14 PM
பெருநாழி: பெருநாழி அருகே உச்சிநத்தம் கிராமத்தில் எஸ்.பி.ஐ., வங்கி இயங்கி வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் இங்கு ஏ.டி.எம்.,வசதி இல்லாததால் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர்.
உச்சிநத்தத்தில் இருந்து 15 கி.மீ.,ல் உள்ள சாயல்குடி, பெருநாழி மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று பணம் எடுக்கும் நிலை உள்ளது. எனவே உச்சிநத்தம் எஸ்.பி.ஐ., வங்கி அருகே புதிய ஏ.டி.எம்., இயந்திரம் அமைத்தால் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
எனவே இதற்கான நடவடிக்கையை எடுக்க வங்கி நிர்வாகம் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.