/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ADDED : செப் 22, 2025 03:19 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தொட்டியவலசை கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே தொட்டியவலசை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கின்றனர்.
முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது.
கிராமத்துக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம், உயரழுத்த மின்கம்பி அமைக்கப் பட்டுள்ளது.
தற்போது மின்கம்பம் சேதமடைந்தும் உயரழுத்த மின்கம்பி எட்டித் தொடும் உயரத்தில் தாழ்வாக செல்கிறது. கிராமத்தில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இனி வரும் நாட்களில் மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் கூறினர்.