/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊராட்சிகளில் அணுக முடியாத நிலையில் தனி அலுவலர்கள் குழப்பத்தில் மக்கள் ஊராட்சிகளில் அணுக முடியாத நிலையில் தனி அலுவலர்கள் குழப்பத்தில் மக்கள்
ஊராட்சிகளில் அணுக முடியாத நிலையில் தனி அலுவலர்கள் குழப்பத்தில் மக்கள்
ஊராட்சிகளில் அணுக முடியாத நிலையில் தனி அலுவலர்கள் குழப்பத்தில் மக்கள்
ஊராட்சிகளில் அணுக முடியாத நிலையில் தனி அலுவலர்கள் குழப்பத்தில் மக்கள்
ADDED : ஜூன் 04, 2025 12:51 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களை அணுக முடியாத நிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஜன., 5ல் ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் ஊராட்சிகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் ஊராட்சி செயலர்களுடன் இணைந்து தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் பெருவாரியான ஊராட்சிகளில் குறைகளை யாரிடம் சொல்வது என்ற தயக்கத்தில் பொதுமக்கள் உள்ளனர். அப்படியே அவர்களின் கோரிக்கையை வெளிப்படையாக கூறினாலும் பிரச்னைக்குரிய தீர்வு எட்ட முடியாத நிலை தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது: முன்பு ஊராட்சி தலைவர்களின் நிர்வாகத்தில் ஊராட்சிகள் இயங்கி வந்த நிலையில் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களிடம் சென்று மக்கள் கோரிக்கைகளை கூறினால் பார்ப்போம், என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கிறது.
காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம், அளவாக்கரைவாடி, செங்கழுநீரோடை, இடிந்தகல் புதூர், கஸ்துாரிபுரம், பக்கீரப்பா தர்கா உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் மின்விளக்கு எரியாமல் காட்சி பொருளாகவே உள்ளது. சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. கிராமங்களுக்கு செல் லும் 17ம் எண் டவுன் பஸ் சீமை கருவேல மரங்களால் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் தனி அலுவலரிடம் கூறுங்கள் எனக் கூறுகின்றனர்.
தனி அலுவலரை அலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு பிஸியாக காட்டிக் கொள்கின்றனர். எனவே அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தனிமையை விரும்பும் நிலையில் தனி அலுவலர்களின் செயல்பாடுகள் உள்ளது. எனவே இதற்கான உரிய நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்றார்.