Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகளால் மக்கள் பாதிப்பு

சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகளால் மக்கள் பாதிப்பு

சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகளால் மக்கள் பாதிப்பு

சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகளால் மக்கள் பாதிப்பு

ADDED : பிப் 24, 2024 05:57 AM


Google News
தொண்டி : கோழி இறைச்சிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அசைவப் பிரியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆடு, நாட்டுக்கோழி, மீன் ஆகியவற்றின் இறைச்சி விலை அதிகரிப்பால் பிராய்லர் கோழி பயன்பாடு அதிகரித்து வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சாலை ஓரங்களில் பிராய்லர் கறிக்கோழி கடைகள் பெருகியுள்ளன.

அசைவப் பிரியர்கள் தேவையை கருதி எந்நேரமும் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது. சிறிய அளவிலான ஒரு கோழி கடைகளில் தினமும் 50 முதல் 100 கோழிகள் வரை உறித்து விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டல்களில் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

கோழி கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை பொது இடங்கள், கண்மாய், குளக்கரைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். தொண்டி, திருவாடானையில் ஆங்காங்கே கொட்டப்படும் கழிவுகள் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் சுற்றுச் சூழலை பாதிக்கிறது.

இக்கழிவுகளை தெருநாய்கள் தின்பதால் நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பிற்குள்ளா கின்றன. நோய்த் தொற்று பாதித்து நாய்கள் அனைத்து பகுதியிலும் சுற்றித் திரிகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வெறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்க் கடிக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. பொதுமக்களும் பாதிக்கப் படுகின்றனர். கோழி கழிவுகளை முறையாக அழிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us