ADDED : பிப் 05, 2024 11:33 PM
திருவாடானை, -திருவாடானை ஸ்டேட் பாங்க் எதிரில் ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் நலசங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
2024 வருங்கால வைப்பு நிதியை பாதுகாக்கவும், பென்சனர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான், செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், பொருளாளர் பூக்கடம்பூ, முத்துராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.