/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் முக்கிய நோய்களுக்கு மருந்து இல்லை நோயாளிகள் பாதிப்புஅரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் முக்கிய நோய்களுக்கு மருந்து இல்லை நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் முக்கிய நோய்களுக்கு மருந்து இல்லை நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் முக்கிய நோய்களுக்கு மருந்து இல்லை நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் முக்கிய நோய்களுக்கு மருந்து இல்லை நோயாளிகள் பாதிப்பு
ADDED : பிப் 05, 2024 11:24 PM
திருவாடானை, - திருவாடானை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் முக்கியமான நோய்களுக்கு மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சித்த மருத்துவம் நம் நாட்டின் பாரம்பரிய சிகிச்சையாக இருந்து வருகிறது. அலோபதி என கூறப்படும் ஆங்கில சிகிச்சை முறை வருவதற்கு முன் கிராமங்களில் இயற்கை மூலிகையைக் கொண்டு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சித்த மருத்துவம் முறையாக படித்தவர்களை நியமித்து அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு துவங்கப்பட்டது. திருவாடானை அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவப் பிரிவு துவங்கப்பட்டது.
தினமும் ஏராளமானோர் மருந்துகள் வாங்கச் செல்கின்றனர். பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் நோயாளிகளுக்கு உணவு முறை குறித்து மருத்துவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
முடக்குவாதம் வலி போன்ற பல முக்கிய நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. ஆரம்பத்தில் சித்த மருத்துவப் பிரிவு துவக்கப்பட்ட போது தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. நாளடைவில் மருந்து, மாத்திரைகள் குறைந்ததால் நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் வழங்குவதும் குறைந்துள்ளது. மருத்துவர்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய்களுக்கு தகுந்தவாறு மூலிகை மருந்துகள் மற்றும் உணவு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
நோயாளிகள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.தற்போது அந்த இடம் காலியாக உள்ளது. சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்பட்டபோது சித்த மருத்துவ சிகிச்சையே மக்களை காத்தது. ஆகவே அனைத்து நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டும். மருத்துவ உதவியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றனர்.