/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை
ADDED : செப் 09, 2025 03:49 AM

பவித்ரோத்ஸம் நிறைவு
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பவித்ரோத்ஸவ நிறைவு விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் சேவை சாதித்தார்.
ஆண்டு முழுவதும் நடக்கும் விழாக்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பவித்ரோத்ஸவம் நடக்கிறது. இந்த விழா அனைத்து திவ்ய தேசங்களிலும் நடக்கும் நிலையில் பரமக்குடி பெருமாள் கோயிலில் ஐந்து நாட்கள் நடந்தன. தினமும் காலை, மாலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு நைவேத்தியம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை திருமஞ்சனம் முதலான தீபாராதனைகள் நடந்தன.
தொடர்ந்து மாலை சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் சேவை சாதித்தார். பின்னர் தீபாராதனைகள் நிறைவடைந்து சந்திர கிரகணத்தை யொட்டி நடை அடைக்கப்பட்டது. நேற்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.