/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி பெருமாள் கோயில் வசந்த விழா தீர்த்தவாரி பரமக்குடி பெருமாள் கோயில் வசந்த விழா தீர்த்தவாரி
பரமக்குடி பெருமாள் கோயில் வசந்த விழா தீர்த்தவாரி
பரமக்குடி பெருமாள் கோயில் வசந்த விழா தீர்த்தவாரி
பரமக்குடி பெருமாள் கோயில் வசந்த விழா தீர்த்தவாரி
ADDED : ஜூன் 11, 2025 11:14 PM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் தீர்த்தவாரி நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஜூன் 7ல் வசந்த விழா துவங்கியது. தினமும் பெருமாள், தாயார் தண்ணீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தின் நடுவில் ஊஞ்சலில் சேவை சாதித்தனர்.
நேற்று முன்தினம் மாலை குதிரை வாகனத்தில்கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி பவனி வந்தார். 5ம் நாளான நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அலங்காரமாகி வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்து விழா நிறைவடைந்தது.