/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூ., மனுபரமக்குடி வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூ., மனு
பரமக்குடி வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூ., மனு
பரமக்குடி வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூ., மனு
பரமக்குடி வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இந்திய கம்யூ., மனு
ADDED : ஜன 07, 2024 04:09 AM
பரமக்குடி; பரமக்குடி காக்கா தோப்பு மற்றும் எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என, இந்திய கம்யூ.,சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி எமனேஸ்வரம் பகுதியில் நடந்தது. இதில் இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பரமக்குடி எமனேஸ்வரம் வைகை ஆற்றங்கரையோரம் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தரைப்பாலம் சந்தை கடை துவங்கி எஸ்.எஸ்., கோவில் தெரு பகுதியில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஜீவா நகர் மற்றும் காக்கா தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் புதிய பாலம் அமைக்க வேண்டும்.
ஜீவா நகர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாறுகால் துார்வாருதல் உள்ளிட்ட எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அவற்றை சீரமைக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.