/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி - சபரிமலை 32ம் ஆண்டு பாதயாத்திரைபரமக்குடி - சபரிமலை 32ம் ஆண்டு பாதயாத்திரை
பரமக்குடி - சபரிமலை 32ம் ஆண்டு பாதயாத்திரை
பரமக்குடி - சபரிமலை 32ம் ஆண்டு பாதயாத்திரை
பரமக்குடி - சபரிமலை 32ம் ஆண்டு பாதயாத்திரை
ADDED : ஜன 03, 2024 05:51 AM

16 வது நாளில் ஐயப்பன் தரிசனம்
பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து 32ம் ஆண்டாக சபரிமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
எமனேஸ்வரம் குருசாமி சேஷய்யன் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இதன்படி 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து நேற்று காலை எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருமுடி கட்டினர்.
இவர்கள் மாலை 4:00 மணிக்கு யாத்திரை புறப்பட்டு இரவு பார்த்திபனுாரில் அம்மன் கோயிலில் தங்கினர். தொடர்ந்து நரிக்குடி, அருப்புக்கோட்டை, இருக்கன்குடி, வரகனுார், சங்கரன்கோவில், கடையநல்லுார், அச்சன் கோயில் மலையாலப்புழா, சீதக்கல், எருமேலி வழியாக ஜன.16 பம்பையில் நீராடி சபரிமலையை அடைகின்றனர். அப்போது ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து சென்ற சுவாமிகளை வணங்கி வழி அனுப்பினர்.