Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சிவபெருமான் உயிர்களுக்கு படியளந்த லீலை ஹர ஹர சிவ சிவ முழக்கத்துடன் பரமக்குடியில் வீதி வலம்

சிவபெருமான் உயிர்களுக்கு படியளந்த லீலை ஹர ஹர சிவ சிவ முழக்கத்துடன் பரமக்குடியில் வீதி வலம்

சிவபெருமான் உயிர்களுக்கு படியளந்த லீலை ஹர ஹர சிவ சிவ முழக்கத்துடன் பரமக்குடியில் வீதி வலம்

சிவபெருமான் உயிர்களுக்கு படியளந்த லீலை ஹர ஹர சிவ சிவ முழக்கத்துடன் பரமக்குடியில் வீதி வலம்

ADDED : ஜன 05, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் அனைத்து உயிர்களுக்கும் படி அருளிய லீலையாக சுவாமி, அம்பாள் என பஞ்ச மூர்த்திகள் வீதி வலம் வந்தனர்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம்,சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் கால பைரவர் அஷ்டமி விழா நேற்று காலை 4:00 மணிக்கு நடந்தது. அப்போது சுவாமி, விசாலாட்சி அம்பிகைக்கு அபிஷேகம் நடந்தது.

கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்து மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தனர்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்தனர்.

எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் சவுந்தர்ய நாயகி நாகநாத சுவாமிக்கு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

அப்போது அனைத்து கோயில்களிலும் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க கால பைரவர் அஷ்டமி விழாவில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படிஅளந்த லீலையாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us