/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஞ்சகவ்ய பொருள் தயாரிப்பு கருத்தரங்கு பஞ்சகவ்ய பொருள் தயாரிப்பு கருத்தரங்கு
பஞ்சகவ்ய பொருள் தயாரிப்பு கருத்தரங்கு
பஞ்சகவ்ய பொருள் தயாரிப்பு கருத்தரங்கு
பஞ்சகவ்ய பொருள் தயாரிப்பு கருத்தரங்கு
ADDED : மார் 16, 2025 12:21 AM
திருப்புல்லாணி; திருப்புல்லாணி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் நாட்டு பசுக்களை பாதுகாப்பது மற்றும் பசுக்களில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்ய பொருட்கள் மூலம் வருமானம் ஈட்டும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது.
கோபால்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் மண்டபம் சண்முகம் கூறியதாவது:
நாட்டுப் பசுக்களை பராமரிக்கவும், அவற்றை முறையாக பாதுகாப்பதும் அவசியம். பசுவில் இருந்து கிடைக்கும் கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகியவற்றில் இருந்து பஞ்சகவ்ய பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
திருநீறு, சிறிய விநாயகர் சிலைகள், ரசாயன கலப்பில்லாத சாம்பிராணி போன்ற பொருள்கள் தயாரிப்பது குறித்து தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். திருப்புல்லாணி மாட வீதிகளில் பசுவை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சேது சமுத்திர ஆரத்தி குழுவினர் மற்றும் கோபால்ஸ் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.