ADDED : மே 10, 2025 07:10 AM

திருவாடானை: திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் பாம்பாலம்மாள் கோயில் 38 ம் ஆண்டு திருவிழா நடந்தது. பாம்பாலம்மாள் மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டார்.
இரவில் பூ தட்டு ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கூறுகையில், இக்கோயிலின் அபிேஷக தீர்த்தம் பாம்பு கடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவார்கள் என்றனர்.