/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடல் : கப்பல், படகிற்கு சிக்கல் பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடல் : கப்பல், படகிற்கு சிக்கல்
பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடல் : கப்பல், படகிற்கு சிக்கல்
பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடல் : கப்பல், படகிற்கு சிக்கல்
பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடல் : கப்பல், படகிற்கு சிக்கல்
ADDED : ஜூன் 30, 2025 11:53 PM

ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலம் 40 நாட்களாக மூடப்பட்டு உள்ளதால் கப்பல், ஆழ்கடல் படகுகள் கடந்து செல்ல முடியாமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து பழைய, புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் திறந்தும் சரக்கு இழுவை கப்பல்கள், பாதுகாப்பு படை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் எளிதாக கடந்து சென்றது.
பழைய ரயில் துாக்கு பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, இதனை திறந்து மூட தனியாரிடம் விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. கடைசியாக மே21ல் இரு துாக்கு பாலத்தையும் திறந்து மூடிய பின், கடந்த 40 நாட்களாக மூடியே கிடக்கிறது.
இதனால் மும்பை, குஜராத், கேரளா மற்றும் சென்னை, ஆந்திரா, ஒடிசா செல்ல வேண்டிய இழுவை மற்றும் மிதவை கப்பல்கள், நாகை, கன்னியாகுமரி செல்ல வேண்டிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் 20 நாட்களுக்கு முன் ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் மனு தரப்பட்டது.
பழைய பாலத்தை அகற்ற உள்ளதால், தற்போது திறக்க முடியாது என ரயில்வே ஊழியர்கள் கறாராக கூறினர்.
இதனால் கப்பல் மாலுமிகள், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்து புறப்பட்ட இடத்திற்கு திரும்பி சென்றனர். வணிக ரீதியாக வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
பழைய துாக்கு பாலத்தை அகற்றும் வரை திறந்து மூட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.