/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொடரும் பராமரிப்பு பணிகளால் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறப்பு ஒத்திவைப்பு தொடரும் பராமரிப்பு பணிகளால் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறப்பு ஒத்திவைப்பு
தொடரும் பராமரிப்பு பணிகளால் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறப்பு ஒத்திவைப்பு
தொடரும் பராமரிப்பு பணிகளால் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறப்பு ஒத்திவைப்பு
தொடரும் பராமரிப்பு பணிகளால் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறப்பு ஒத்திவைப்பு
ADDED : செப் 02, 2025 05:15 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் பராமரிப்பு பணி தொடர்ந்து நடப்பதால் பாலம் திறப்பதை தெற்கு ரயில்வே ஒத்திவைத்தது.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைத்து ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இப்பாலம் நடுவில் லிப்ட் முறையில் இயங்கக்கூடிய செங்குத்து துாக்கு பாலம் அமைத்தனர். இந்த துாக்கு பாலம் திறந்ததும் இழுவை கப்பல், சரக்கு கப்பல், பாதுகாப்பு படை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்வது வழக்கம்.
ஆனால் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல் துாக்கு பாலத்தை திறந்து மூடுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டது. கடைசியாக ஆக.,12ல் துாக்கு பாலம் திறந்த பின் மூடுவதில் 6:00 மணி நேரம் தாமதமாகியதால் ரயில் போக்குவரத்து பாதித்தது.
அங்கு மென்பொருளில் பிரச்னை உள்ளதாகவும், இதனை சரி செய்ய தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க துாக்கு பாலத்தில் 10 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாலத்தை கடந்து சென்னை, ஆந்திரா, ஒடிசா மற்றும் கன்னியாகுமரி, கேரளா, மும்பை செல்ல வேண்டிய இழுவை கப்பல்கள், பாய்மரப் படகுகள் அங்குள்ள துறைமுகங்களில் ஆங்காங்கே காத்திருக்கின்றன. ஆனால் பராமரிப்பு பணிகள் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதால் துாக்கு பாலத்தை திறப்பதை ஒத்திவைத்து உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.