Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிராமப் பகுதிகளில் பனை தவுண் சீசன்

கிராமப் பகுதிகளில் பனை தவுண் சீசன்

கிராமப் பகுதிகளில் பனை தவுண் சீசன்

கிராமப் பகுதிகளில் பனை தவுண் சீசன்

ADDED : ஜன 03, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பனை தவுண் சீசன் துவங்கி உள்ளதால் பனைத் தவுணை சேகரிப்பதில் கிராமப்புற விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பனை மரத்தில் குருத்து ஓலை முதல் அடிமரம் வரை அனைத்தும் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக உள்ளன.

குறிப்பாக பனை மரத்தில் கிடைக்கும் ஓலையை பயன்படுத்தி ஓலைப் பாய், விசிறி, பெட்டி, கூடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், வீடு கட்டுவதற்கு சட்டங்க பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் பனை மரத்தில் நுங்கு, பனம் பழம் (பனங்காய்), பதநீர், கருப்பட்டி என பனைகளில் கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பழனி வலசை உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளுக்காக பனங்கொட்டைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடவு செய்யப்பட்ட பனங்கொட்டைகள் கிழங்குகளாக தற்போது வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு வந்துள்ளன. அதிலிருந்து கிடைக்கும் பனை தவுணில் இயற்கையாக கிடைக்கும் சுவை மிகுதியாக உள்ளதால் தற்போது கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனை தவுணை சேகரித்து உண்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

ராமநாதபுரம் உள்ளிட்ட டவுன் பகுதிகளில் பனை தவுண் விற்பனை செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us