/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகள் தாமதம்! விவசாயிகள் கவலைமழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகள் தாமதம்! விவசாயிகள் கவலை
மழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகள் தாமதம்! விவசாயிகள் கவலை
மழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகள் தாமதம்! விவசாயிகள் கவலை
மழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகள் தாமதம்! விவசாயிகள் கவலை
ADDED : செப் 11, 2025 10:53 PM

ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடிப்பட்டம் ஆக.,ல் துவங்கி செப்., வரை விதைப்பு பணிகள் நடைபெறும். இந்நிலையில் போதிய மழை பெய்யாததால் நெல் விதைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், நயினார்கோவில், பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவ மழையை எதிர்பார்த்து 90 சதவீதம் விளை நிலங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடி மாதத்தில் (செப்.,) நெல் விதைப்பு செய்வதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் ஆடி மாதத்தில் விதைப்பு செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஆவணி மாதம் இறுதி வரை பருவ மழையை எதிர்பார்த்து விதைப்பு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டிலும் மழை பெய்வது போல் மேக கூட்டங்கள் கூடுவதும் லேசான துாறலுடன் ஏமாற்றுவதால் விவசாயிகள் நெல் விதைப்பு செய்வதை தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர்.
மாவட்டத்தின் நெற்களஞ்சியங்களான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஒரு சில கிராமங்களில் மட்டும் நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியை தாமதப்படுத்தி வருவதால் நெல் விதைப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.