/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி
ADDED : செப் 02, 2025 10:57 PM

ராமநாதபுரம்; வேளாண் துறை சார்பில் மண்டபம் பகுதியில் உள்ள ராஜா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள தரணி இயற்கை விவசாயப் பண்ணையில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன், திருப்புல்லாணி உதவி இயக்குனர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
பண்ணை உரிமையாளர் முன்னோடி இயற்கை விவசாயி தரணி முருகேசன் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும், இயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்து தயாரிப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.