ADDED : மே 18, 2025 10:16 PM

பரமக்குடி : பரமக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கம் சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி விழா ஊர்வலம் நடந்தது.
இந்திய ராணுவத்தின் பெருமையை கொண்டாடும் வகையில் முன்னாள் படை வீரர்கள் ஓட்டப்பலம், ஐந்து முனை, ஆர்ச், பஜார்
வழியாக காந்தி சிலை முன்பு ஊர்வலத்தை நிறைவு செய்தனர். ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.
மேலும் ராணுவத்தினரை இழிவுபடுத்தும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை கண்டித்து காந்தி சிலை முன்பு கோஷம் எழுப்பினர். முன்னாள் ராணுவ சங்க தலைவர் கேப்டன் பீட்டர், செயலாளர் கணேசன், பொருளாளர் வட்டாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.