Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நவபாஷாண கோயிலில் பரிகார பூஜை ஆன்-லைன் கட்டண முறை அமல்

நவபாஷாண கோயிலில் பரிகார பூஜை ஆன்-லைன் கட்டண முறை அமல்

நவபாஷாண கோயிலில் பரிகார பூஜை ஆன்-லைன் கட்டண முறை அமல்

நவபாஷாண கோயிலில் பரிகார பூஜை ஆன்-லைன் கட்டண முறை அமல்

ADDED : ஜன 24, 2024 04:31 AM


Google News
தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக கோயிலில் பரிகார பூஜைகளுக்கு ஆன்-லைன் கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருமணத் தடை, ஏவல், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவர்கள் பரிகார பூஜைகள் செய்வதற்கு கோயிலை நிர்வகித்து வரும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான கட்டண தொகையை ஊழியர்கள் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கி வந்தனர்.

இந்நிலையில், பக்தர்களுக்கு எளிதாகவும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாகவும் ஆன்-லைன் முறையில் (பி.ஓ.எஸ்) கியூஆர் கோடுடன் ரசீது வழங்குவதற்காக அலுவலகத்திற்கு பி.ஓ.எஸ்., மிஷின் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேற்று முதல் பக்தர்களுக்கு பரிகார டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் ஞானசேகரன் செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us