ADDED : செப் 05, 2025 11:25 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாத்திய நேந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்லையா 65.
இவர் சந்தவளியான் கோயிலில் நடந்த கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி யுள்ளார். பின்னர் உற வினரான கடக்கராண்டி யுடன் நேற்று மாலை டூவீலரில் சந்தவளியான் கோயிலில் இருந்து மதுரை சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியதில் செல்லையா சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். கடக்கராண்டி காயங்களுடன் ராமநாத புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டார். ராமநாதபுரம் நகர் போலீசார் காரை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமாரிடம் 42, விசாரிக்கின்றனர்.