/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் கவிழ்ந்து ஒருவர் பலி2 பேர் காயம் கார் கவிழ்ந்து ஒருவர் பலி2 பேர் காயம்
கார் கவிழ்ந்து ஒருவர் பலி2 பேர் காயம்
கார் கவிழ்ந்து ஒருவர் பலி2 பேர் காயம்
கார் கவிழ்ந்து ஒருவர் பலி2 பேர் காயம்
ADDED : மே 30, 2025 11:43 PM
திருவாடானை: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலபட்டினத்தை சேர்ந்தவர்கள் பைசல்கான் 32, காதர்பாட்ஷா 42, ஹிதயத்துல்லா 35. மூவரும் தொண்டி வழியாக மதுரை செல்வதற்காக காரில் சென்றனர். நேற்று மாலை 3:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் விலக்கு ரோட்டில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஹிதயத்துல்லாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். காயமடைந்த மற்ற இருவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.