ADDED : ஜூன் 15, 2025 02:35 AM
ராமேஸ்வரம்:- ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளியால் மரம் முறிந்து மூதாட்டி மீது விழுந்ததில் பலியானார்.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இரு நாட்களாக மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. நேற்று மாலை ராமேஸ்வரம் ஏறகாட்டில் உள்ள பழமையான வேப்ப மரத்திற்கு கீழ் பஞ்சவர்ணம் 65, கிராம தலைவர் தட்சிணாமூர்த்தி 56, உட்பட பலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீசிய சூறாவளியில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. இதில் காயமடைந்த பஞ்சவர்ணத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். காயமடைந்த தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
--