ADDED : அக் 02, 2025 10:40 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளியில் நடந்தது. தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
நேற்று (அக்.,2) நிறைவு விழாவில் பள்ளி தாளாளர் தேவதாஸ் ராஜன் பாபு, தலைமையாசிரியர் இந்திராகாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அகஸ்டினா ஜெபகுமாரி நன்றி கூறினார்.


