/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர் விடுதிகளில் சத்தான உணவு வழங்கவில்லை : பெற்றோர் புகார் :அதிகாரிகளே ஆய்வு செய்யுங்கமாணவர் விடுதிகளில் சத்தான உணவு வழங்கவில்லை : பெற்றோர் புகார் :அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க
மாணவர் விடுதிகளில் சத்தான உணவு வழங்கவில்லை : பெற்றோர் புகார் :அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க
மாணவர் விடுதிகளில் சத்தான உணவு வழங்கவில்லை : பெற்றோர் புகார் :அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க
மாணவர் விடுதிகளில் சத்தான உணவு வழங்கவில்லை : பெற்றோர் புகார் :அதிகாரிகளே ஆய்வு செய்யுங்க
UPDATED : பிப் 12, 2024 07:16 AM
ADDED : பிப் 12, 2024 04:34 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் போதிய சத்தான உணவுகள் வழங்கபடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் கண்காணித்து உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாடானை, தொண்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் நல மாணவ விடுதிகள் உள்ளன. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தலையணை, போர்வை, விளையாட்டு சீருடைகள், சத்தான உணவுகள் வழங்கபடுகிறது.
ஆனால் சில விடுதிகளில் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சில மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது- விடுதிகளை ஆரம்ப நாட்களில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்தனர்.
தற்போது அவ்வாறு இல்லாததால் போதிய சத்தான உணவுகள் வழங்கபடுவதில்லை. விடுதிகளில் அரைகுறை செயல்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கபட வாய்ப்புள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப தான் நிதி ஒதுக்கபடுகிறது. ஆகவே அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் விடுதிகள் இயங்குகிறதா, தரமான உணவு வழங்கபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்றனர்.