/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கருமொழியில் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்புகருமொழியில் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு
கருமொழியில் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு
கருமொழியில் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு
கருமொழியில் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு
ADDED : ஜன 03, 2024 05:50 AM
திருவாடானை: திருவாடானை அருகே கருமொழி ஊராட்சியில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது.
கருமொழி ஊராட்சியில் கோவனி, சானாவயல், ஆட்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கபட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் போனதால் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
காவிரி நீர் போதிய வினியோகம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது. மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.
இது குறித்து கருமொழி ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்தார். தற்போது சிறப்பு நிதியாக ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கபட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது. ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம், செயலர் மீனாட்சிசுந்தரம், மக்கள் பங்கேற்றனர்.