Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரம் கோயில் மகால் வாடகை வசூலில் அலட்சியம்

ராமேஸ்வரம் கோயில் மகால் வாடகை வசூலில் அலட்சியம்

ராமேஸ்வரம் கோயில் மகால் வாடகை வசூலில் அலட்சியம்

ராமேஸ்வரம் கோயில் மகால் வாடகை வசூலில் அலட்சியம்

ADDED : ஜன 04, 2024 01:59 AM


Google News
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான திருமண மகால், கடைகளின் வாடகை வசூலிப்பதில் ஊழியர்கள் மந்தமாக உள்ளதால், ஹிந்து அறநிலைதுறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான நம்புநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் திருமண மகால் உள்ளது. நம்புநாயகி அம்மன் கோயில் நடக்கும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுபநிகழ்ச்சிக்கு இந்த மகாலை பயன்படுத்திட கோயில் நிர்வாகம் ரூ.2000 வாடகை வசூலிக்கிறது. ஆனால் இந்த மகாலில் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 சுபநிகழ்ச்சிகள் நடக்கும் நிலையில், வாடகை வசூலிப்பதில் ஊழியர்கள் கவனம் செலுத்துவதில்லை.

மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான மேலரத வீதி, தமானி லாட்ஜ் அருகில், உஜ்ஜயினி மாகாளி கோயில் அருகில் உள்ள ஏராளமான கடைகளிலும் வாடகை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவதில்லை.

இதற்கு கோயில் அதிகாரியின் ஆசி இருப்பதால் வசூலிக்கும் ஊழியரும் அலட்சியமாக வேறுபிற பணிகளுக்கு செல்கிறார். இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிப்பதிலேயே குறிக்கோளாக கோயில் நிர்வாகம் உள்ளது. ஊழியர்களின் ஆசியுடன் மகால், கடைகளின் வாடகையை வியாபாரிகள் செலுத்தாமல் உள்ளனர்.

இதன் மூலம் கோயில் ஊழியரும் பயனடைகிறாரோ என சந்தேகம் எழுகிறது. எனவே வாடகை வசூலிப்பதில் தீவிரம் காட்ட ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us