/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விலங்கியல் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கம் விலங்கியல் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கம்
விலங்கியல் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கம்
விலங்கியல் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கம்
விலங்கியல் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கம்
ADDED : செப் 18, 2025 06:41 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் 'விலங்கியல் ஆராய்ச்சியில் புதுமை அணுகுமுறைகள்' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அதிராம்பட்டிணம் காதீர்முகைதீன் கல்லுாரி விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முத்துகுமாரவேல் மெல்லுடல் உயிர்களின் சிறப்பு பண்புகள், நிகழ்காலத்தில் உயிர்களின் போக்குகள், உயிரினங்களின் சுற்றுச்சூழல் தன்மைகள் குறித்து பேசினார்.
கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, விலங்கியல் துறைத் தலைவர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.