ADDED : செப் 11, 2025 05:11 AM
ராமநாதபுரம் -: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, பாரம்பரிய உணவு தயாரிப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ரஞ்சித்குமார் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட ஐ.சி.டி.எஸ்.,துறையின் திட்ட அலுவலர் விசுபாவதி ஊட்டச்சத்து குறைபாட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், ஊட்டச்சத்து வாரவிழாவின் நோக்கம் குறித்தும் பேசினார். மாவட்ட மருந்தக ஆய்வாளர் டாக்டர் ஆயிஷா ஊட்டசத்து நிறைந்த இயற்கை உணவின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பேசினர். ஏற்பாடுகளை நாட்டு நலத்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம், நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர். பேராசிரியர் சிவசங்கரி நன்றி கூறினார்.