/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 28, 2024 04:49 AM

ராமநாதபுரம் : -நயினார்கோவில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வட்டார அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழா பெருங்களூர் கிராம ஊராட்சியில் ஊட்டச்சத்தை துாண்டுதல் என்ற தலைப்பில்நடந்தது.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட திட்ட அலுவலர் விசுபவதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜோன்ஸ் கீதா முன்னிலை வகித்து குழந்தைகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி வரவேற்றார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணசாமி ஊட்டச்சத்து குறித்து பேசினார்.
பெருங்களூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை விஜி, குழந்தைகள்வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் ராதாலட்சுமி, வட்டாரஒருங்கிணைப்பாளர் கவுதம், திட்ட உதவியாளர் தினேஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.