ADDED : செப் 23, 2025 11:39 PM

தொண்டி; தொண்டி பகுதியில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதால் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே அரச மரம், வேப்ப மரங்கள் உள்ளன. மரங்களில் விளம்பர பலகைகள் அதிகளவில் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆணி அடிப்பதால் நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுப்போக அதிக வாய்ப்பு உள்ளது.
சிறிய மரங்கள் முதல் பல ஆண்டு கடந்த பழமையான மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மரங்களில் விளம்பர பதாகைகளை ஆணி அடித்து வைப்பதால் மரங்கள் பட்டுப்போய் சாயும் அபாய கட்டத்தில் உள்ளது.
மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.