/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தயாராகிறது நகராட்சி கீழக்கரையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தயாராகிறது நகராட்சி
கீழக்கரையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தயாராகிறது நகராட்சி
கீழக்கரையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தயாராகிறது நகராட்சி
கீழக்கரையில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு தயாராகிறது நகராட்சி
ADDED : ஜூன் 17, 2025 05:02 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட், ஹிந்து பஜார், முஸ்லிம் பஜார் உள்ளிட்ட பெருவாரியான போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, கமிஷனர் ரெங்க நாயகி ஆகியோர் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட், ஹிந்து பஜார், முஸ்லிம் பஜார், வங்கிகள் அதிகம் உள்ள பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதுகுறித்து நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதனடிப்படையில் மேற்காணும் இடங்களில் அளவீடு செய்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கீழக்கரை தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒன்றிணைந்து இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என்றனர்.
காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.