/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 11:38 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார்.
கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குமார்(பா.ஜ.,): ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் கடை தொடர்பான தீர்மானம் தெளிவாக இல்லை. எவ்வளவு வாடகை, வைப்புத் தொகை எவ்வளவு என்ற விபரங்கள் இல்லை. நகரில் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது. மீண்டும் அதே நபருக்கு பணி ஒதுக்கீடு செய்யக்கூடாது.
வேறு நபருக்கு வழங்க வேண்டும். புதிதாக கூட்டுகுடிநீர் திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் தானே. ஏன் அதனை இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.
தலைவர்: புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைப்படி அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும். எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை. முறைப்படி நாளிதழ்களில் டெண்டர் விடப்பட்டு கடைகள் வாடகைக்கு விட உள்ளோம். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
எல்லாமே சரியாக நடக்கிறது. பாதாள சாக்கடை பணியை வேறு நபருக்கு மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கமிஷனர்: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் வடிகால் வாரியத்தால் ரூ.222 கோடியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர். அதன் விபரங்கள், அரசாணை தேவை என்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
நாகராஜன் (தி.மு.க.,): ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தலைவர்: ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நீங்கள் சொல்லும் இடம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது.
அவர்களிடம் பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்று நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது குழாய்கள் சேதமடைந்து பல இடங்களில் தண்ணீர் ஓடுகிறது.
ஜல்-ஜீவன் திட்டத்தில் முறையாக வீடுதோறும் இணைப்பு தராமல் குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். குழாய் பதிக்கும் பணியால் குடிநீர் வீணாகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.
அவர்கள் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு புதிதாக ரோடு அமைத்து தரப்படும். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.