ADDED : செப் 17, 2025 07:29 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது.
முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.