ADDED : ஜூன் 04, 2025 11:37 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே சுத்தமல்லி ஜெய மாரியம்மன் கோயில், முளைப்பாரி விழா நடைபெற்றது.
முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பெண்களின் கும்மியாட்டம், இளைஞர்களின் ஒயிலாட்டம் நடைபெற்றது. பின்னர் கோயிலில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்து நீரில் கரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.